Posts

விக்கிமேனியா 2024 - பன்னாட்டு விக்கி மாநாடு - போலந்து

Image
கத்தோவித்சா, போலந்து அறிமுகம் யாவராலும் தொகுக்கப்படக்கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவும், கட்டற்ற பல்லூடகங்களை உள்ளடக்கிய விக்கி பொதுவகம், கட்டற்ற நூல்களை உள்ளடக்கிய விக்கிமூலம், கட்டற்ற அகராதியான விக்சனரி போன்ற சகோதரத் திட்டங்களும் அடங்கிய தொகுப்பு விக்கிமீடியாத் திட்டங்கள் எனப்படும். இவற்றை நிர்வகிக்கும் இலாபநோக்கற்ற நிறுவனமான விக்கிமீடியா அறக்கட்டளையால் இத்திட்டங்களில் பங்களிக்கும் தன்னார்வலர்களை இணைத்து அனுபவங்களைப் பகிர்வதற்காகவும், திறன்களை மேம்படுத்தவும், திட்டங்களைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் ஒழுங்கமைக்கப்படும் பன்னாட்டு மாநாடு விக்கிமேனியா என அழைக்கப்படுகிறது. அவ்வகையிலான பத்தொன்பதாவது பன்னாட்டு மாநாடு இந்த ஆண்டு ஆகத்து 7 முதல் 10 வரை போலந்து நாட்டில் கத்தோவித்சா நகரில் நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பங்களித்துவரும் தன்னார்வலர் என்ற வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான முழுமையான நிதிநல்கை கிடைக்கப்பெற்றேன். அந்த மாநாட்டில் பங்கேற்ற அனுபவங்களை இங்கு பகிர்கிறேன். நுழைவிசைவு மாநாட்டில் கலந்துகொள்வதற்கான நல்கை குறித்த அறிவித்தல் கிடைத்த ப...

இந்திய விக்கி மாநாடு 2023

Image
மூன்றாவது இந்திய விக்கி மாநாடு, 2023 ஏப்ரலில் ஐதராபாத்தில் நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் நான் ஆற்றிவரும் தன்னார்வப் பங்களிப்புகளின் அடிப்படையில் இந்த மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் ஏப்ரல் 27 முற்பகல் யாழ்ப்பாணம் பலாலி விமானநிலையத்தைச் சென்றடைந்தேன். யாழ்ப்பாண விமான நிலையம் அளவில் மிகச்சிறியதாக இருப்பதாலும் குறைந்தளவு பயணிகளே பயணிப்பதாலும் பயண நடைமுறைகள் மிக விரைவாக முடிவடைந்தன. பிற்பகல் 1 மணியளவில் யாழ். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 2 மணியளவில் சென்னை சென்றடைந்தேன்.  அங்கு நண்பர் மணிமாறன் என்னுடன் இணைந்து கொண்டார். இருவரும் சென்னையிலிருந்து விமானம் மூலம் 9 மணியளவில் ஐதராபாத் சென்றடைந்தோம். இரவு 11 மணியளவில் மாநாடு நடைபெற்ற விடுதியைச் சென்றடைந்தோம். யாழ்ப்பாண விமானநிலையத்தில்  வந்திறங்கிச் சென்னை செல்ல ஆயத்தமாகும் விமானம் யாழ்-சென்னை விமானத்தின்  உட்புறம் சென்னை விமானநிலையம் ஐதராபாத் விமானநிலையத்தில்  இந்தியன் பிரீமியர் லீக் அணிகளின் பெயர்களுடன் துடுப்புகள் மாநாட்டு அரங்கு பங்கேற்ற விக்கிமீடியர்கள் மறுநாள் காலை 9 மணியளவ...

அமிர்தசரஸ்

Image
அறிமுகம் 2017 - 2018 இல், விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தர கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தது.  வேங்கைத்திட்டம்  எனப்பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் பஞ்சாபி விக்கிப்பீடியா முதலிடத்தையும் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாம் இடத்தையும் பெற்றன. இதில் வெற்றி பெற்ற சமுதாயத்தினருக்கான பயிற்சிப் பட்டறை டிசம்பர் மாதம் 6 முதல் 9 வரை அமிர்தசரசில் நடைபெற்றது. இதில் 20 தமிழ் விக்கிப்பீடியர்கள் சிறப்புப் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ள பஞ்சாபி மொழி விக்கிப்பீடியர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். கலந்துகொண்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பயணம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம்  அமிர்தசரஸ்  நகரில் நடைபெற்ற  வேங்கைத்திட்டம் பயிற்சிப்பட்டறையில்  கலந்துகொள்வதற்காக டிசம்பர் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து மூலம் புறப்பட்டு...